தல அஜித் அடுத்ததாக நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் நடிக்கவுள்ள 'பிங்க்' படத்தின் ரீமேக்கில் பிரபல இயக்குனரின் மகளும், நடிகை லிசியின் மகளுமான கல்யாணி நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

'விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து தல அஜித் கடந்த 2016 ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படமான 'பிங்க்' படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார்.  

இது குறித்த தகவல்கள் உறுதிசெய்யப்பட்டு, படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது. இந்தப் படத்தில் அஜித் நடிகர் அமிதாபச்சன் ஏற்று நடித்த வேடத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் மூன்று முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர்களுக்கான, தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.  அந்த வகையில் திருமணத்திற்கு பின் திரையுலகில் தலைகாட்டாமல் இருந்து வந்த நடிகை நஸ்ரியா இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது.

இதைத்தொடர்ந்து மற்றொரு கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் மகள் கல்யாணி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாக வில்லை.

முதல் முறையாக வித்தியாசமான கெட்டப்பில் அஜித் நடிக்க உள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.  இந்தப் படத்தை சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது