Asianet News TamilAsianet News Tamil

அஜித்துக்கு ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல நடிகை....!!!

famouse actress-reject-the-ajith
Author
First Published Dec 22, 2016, 5:47 PM IST


கோலிவுட்டில் முன்னனி நடிகராக இருப்பவர் தல அஜித். இவருடன் நடக்க பல முன்னணி நடிகைகள் போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இப்படி இருக்க ஒரு நடிகை அஜித்துடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியாக்கி உள்ளது. 

இவருடன் நடிக்க மறுப்பது யார் என்றால்....?   அஜித் மனைவி ஷாலினியின் தங்கை ஷாமிலி தான்.

இவர் அஜித் - ஷாலினியின் திருமணத்திற்கு பின்னர் மேல் படிப்புக்காக சிங்கப்பூர் சென்றுவிட்டார். படிப்பு முடிந்த பின் அங்கேயே செட்டிலாகி விடலாமா அல்லது இந்தியாவுக்கு சென்று நடிக்கலாமா என யோசித்தவர். 

இந்தியாவிற்க்கு  வந்து ஷாமிலிக்கு வீர சிவாஜி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

ஏற்கனவே  விக்ரம் பிரபு தங்கை மற்றும் அவரது வீட்டில் பழகியிருந்ததாலும்  நடிப்பதற்கு எளிதாக இருந்ததாலும். கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன் என கூறியுள்ளார்.

மேலும் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதை ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு, பதில் அளித்துள்ள ஷாமிலி,  அஜித் எனது அண்ணன் மாதிரி என்றும்.

அவருடன் முக்கிய வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே நடிப்பேன், கண்டிப்பாக ஜோடியாக நடிக்க மாட்டான் என கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios