உடல் நலக்குறைவு காரணமாக தன்னுடைய மருத்துவ செலவிற்கு, உதவி கேட்ட வந்த நடிகை விஜயலட்சுமிக்கு, முன்னணி நடிகர் சிவராஜ் குமார், பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

கன்னட திரையுலகில் 'நாகமண்டலா' என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இந்த படத்தை தொடர்ந்து, 'பூந்தோட்டம்' படத்தின் மூலமாக தமிழில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் இவர் அறிமுகமாகி இருந்தாலும், இவரை தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகப்படுத்தியது, விஜய் - சூர்யாவுடன் இவர் இணைந்து நடித்த 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் தான். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக விஜயலட்சுமி நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து  'ராமச்சந்திரா', 'மிலிட்டரி', 'எஸ் மேடம்' ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் இவரால் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை. மேலும் பிரபல இயக்குனரும் அரசியல் தலைவருமான ஒருவருடன், காதல் கிசுகிசுவில் சிக்கினார்.

இந்த சர்ச்சையில் இருந்து மீண்ட விஜயலட்சுமி சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியே இருந்தார். பின் முத்தாரம், செல்லமே, வசந்தம், நந்தினி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.

தற்போது 40 வயதை கடந்த இவர், திருமணம் செய்து கொள்ளாமல் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். மேலும் சமீபத்தில் உடல் நல குறைப்பாடு காரணமாக மருத்துவ மனையில் இவர் அனுமதிக்கப்பட்ட போது இவரின் தங்கை, தன்னுடைய சகோதரி மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லாமல் சிரமங்களை சந்தித்து வருவதாக கூறினார். பின் இவரின் மருத்துவ செலவிற்கு, பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை தானாக முன்வந்து செய்தனர்.

இந்நிலையில் கன்னட  முன்னணி நடிகர்கள் ஒரு சிலர் தனக்கு உடல்நிலை சரியில்லாத போதிலும் உதவிகள் செய்ய முன் வரவில்லை என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் விஜயலட்சுமி. 

இவரின் இந்த வீடியோவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, முன்னணி நடிகரான சிவராஜ்குமார் கூறியுள்ளதாவது... "விஜயலட்சுமி தொடர்ந்து உதவிகள் செய்து கொண்டே இருக்க முடியாது... உடலில் குறையுள்ளவர்கள் கடினமாக உழைத்து தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள். அப்படியிருக்கும் போது, நல்ல கை , கால், மனநலம் ஆகியவை நன்றாக இருக்கும் இவரால்  அவரை பார்த்துக் கொள்ள முடியாத என கேள்வி எழுப்பி விளாசியுள்ளார். முன்னணி நடிகர் ஒருவர் இப்படி பேசியுள்ளது பலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.