இந்த ஆண்டின் தொடக்கம் முதலே ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பல திறமையான கலைஞர்களை பரிகொடுத்து வருகிறோம். காலத்தால் ஈடு செய்ய முடியாத பல்வேறு இழப்புகளுடன் ரசிகர்கள் பலரது மனம் கவர்ந்த நடிகர், நடிகைகளின் தற்கொலை, கொலை போன்ற துரதிஷ்டவசமான மரணங்கள் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அப்படி கொலையா? தற்கொலையா? என கண்டறிய முடியாத அளவிற்கு இளம் நடிகர் மரணமடைந்துள்ளது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது அமெரிக்காவை சேர்ந்த நடிகர் எடி ஹசெல்லா வயிற்றில் சுடப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.த கிட்ஸ் ஆர் ஆல்ரைட் என்ற படத்திலும், சர்பேஸ் என்ற டிவி தொடரிலும் நடித்திருந்த இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் காதலியின் அபார்மெண்டில் அதிகாலை 1 மணியளவில் வயிற்றில் சுடப்பட்ட காயத்துடன் கிடந்துள்ளார். அப்போது வெளியே சென்று திரும்பிய அவருடைய காதலி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: காதல் மனைவியுடன் கருணாஸ் நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்... கறுப்பு உடையில் கலக்கல் கிளிக்ஸ்...!

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 30 வயதிலேயே எடி ஹசெல்லா மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது ஹாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடி தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.