தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆன்ட்ரியா. “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு” போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் “தரமணி” படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும், நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது. அதன் மூலம் கமலுடன்  “விஸ்வரூபம்” படத்தின் முதலாவது மற்றும் 2ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தி நடித்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் உடன் ஆன்ட்ரியா நடித்த  வடசென்னை திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. 

இதையும் படிங்க:  “ட்வீட்டை ஒழுங்கா பாத்தியாடா?”.... ஒருமையில் திட்டிய சூர்யா ரசிகரை தனது பாணியிலேயே டீல் செய்த சரத்குமார்...!

இடையில் இசையமைப்பாளர் அனிருத் உடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே திருமணமான நடிகருடன் உறவில் இருந்ததாகவும், அதனால் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ஆன்ட்ரியா பல மாதங்கள் சிகிச்சையில் இருந்ததாகவும் கூறப்பட்டது. அந்த சம்பவத்தால் மனம் உடைந்த ஆன்ட்ரியா சினிமாவில் நடிக்காமல் இருந்தார். 

இதையும் படிங்க:  “பலாத்காரம் செய்வோம் என மிரட்டுகிறார்கள்”... பிரபல நடிகரின் ரசிகர்கள் மீது நடிகை பரபரப்பு புகார்...!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் ஆன்ட்ரியாவிற்கு  முக்கிய கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் விஜய்யை சந்தித்த ஆன்ட்ரியா, பிகில் படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாடலை பாடியதே அவர் தான் என்று தெரியாமல் ஆகா... ஓஹோ... என பாராட்ட, ஏன்மா நீயெல்லாம் தமிழ்நாட்டுல தான் இருக்கியா? என மரண கலாய் கலாய்த்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My first tricycle 🙈 #tbt also #worldsiblingday #betterlatethannever

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on Jun 2, 2020 at 11:52pm PDT

இதையும் படிங்க: அப்பா ரோபா சங்கர் முகத்தில் காரித் துப்பிய “பிகில்” இந்திரஜா... வைரலாகும் வீடியோ...!

தற்போது லாக்டவுன் நேரத்தில் பிரபலங்கள் பலரும் தங்களது சின்ன வயது நியாபகங்களை பகிர்ந்து கொள்கின்றனர். அப்படி ஆன்ட்ரியாவும் தனது குழந்தை பருவ போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சின்ன வயதில் சைக்கிள் ஓட்டுவது போன்ற அந்த போட்டோவை பகிர்ந்துள்ள ஆன்ட்ரியா, அது தன்னுடைய முதல் சைக்கிள் என்றும் பதிவிட்டுள்ளார்.