ஓடிடி தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை எந்த டி.வி. சேனல் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. 

தமிழில் வெளியான விளையாட்டு தொடர்பான பல்வேறு படங்களுக்கும் மசூடம் சூட்டும் வகையில் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் பாராட்டுக்களை குவித்து வருகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் கடந்த வாரம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்தில், துஷாரா விஜயன், கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பதை விட வாழ்ந்துள்ளனர் என்றும் சொல்லும் அளவிற்கு அசத்தியிருந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இயக்குநர் பா.ரஞ்சித் 1970களுக்கு பிற்பகுதியில் வடசென்னையில் பிரபலமாக இருந்த பாக்ஸிங் கலாச்சாரத்தை கண்முன் காட்டியுள்ளதாக ரசிகர்கள் சோசியல் மீடியாவில் புகழ்ந்து வருகின்றனர். கபிலன், ரங்கன் வாத்தியார், வெற்றிச்செல்வன், வேம்புலி, டான்சிங் ரோஸ், மாரியம்மா, டாடி என பல்வேறு கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்காமல் இடம்பிடித்துள்ளது. சோசியல் மீடியாவில் இன்றளவும் சார்பட்டா பரம்பரை படம் மீதான ரசிகர்களின் பாசிட்டிவ் கருத்துக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றன. 

ஓடிடி தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை எந்த டி.வி. சேனல் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே பெரிதாக புதிய படங்களை வாங்காமல் இருந்து வந்த கலைஞர் டி.வி., சார்பட்டா பரம்பரை படத்தை தட்டித்தூக்கியுள்ளது. சார்பட்டா பரம்பரை படத்தில் குத்து சண்டை பற்றி மட்டுமல்லாது பாக்ஸர்களுடன் திமுக ஆட்சியின் போது நெருக்கடி நிலை எப்படி இருந்தது என்பதையும் கண்முன் காட்டியுள்ளதாக பாராட்டுக்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.