திரைப்படங்களில் வில்லனாக நடித்த பல நடிகர்களும், நிஜ வாழ்க்கையில் மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றனர். தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகி, தற்போது காமெடி கலந்த வில்லனாக திரையில் கலக்கி கொண்டிருப்பவர் மன்சூர் அலி கான்.

இவர் சமுதாய பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவர். அந்த வகையில் பிரபல வில்லன் நடிகரான இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.

தற்போது தமிழகத்தில் நிகழ்ந்துவரும் சமுதாய பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் இவர், அரசியல் வாதிகளை விமர்சிக்க ஒரு போதும் தயங்கியதில்லை. மேலும் இவர் குளங்களை சுத்தம் செய்வது போன்ற பணிகளில் இறங்கி வேலை செய்ததால், இவர் மீது மக்களுக்கு நல்ல மரியாதை இருக்கிறது.

தற்போது தமிழ அரசு அறிமுகப்படுத்தி இருக்கும், 8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக பொது மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த திட்டம் குறித்து மன்சூர் அலி கானும் காட்டமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். இந்த திட்டம் குறித்து அவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.  இதனால் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகானை, வரும் ஜீன் 29ஆம் தேதி வதை நீதிமன்ற காவலில் வைக்குமாறு தீர்ப்பு கொடுத்திருக்கிறது,  மேட்டூர் நீதிமன்றம். இந்த தீர்ப்பு அவரது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்திருக்கிறது.