Asianet News TamilAsianet News Tamil

உங்களால மட்டும் எப்படி பிரதமர் கூட செல்ஃபி எடுக்க முடிஞ்சாது... வருத்தத்தை பகிர்ந்த எஸ்.பி.பி...!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழகத்தை புறக்கணித்து வருவதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த சமயத்தில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சோசியம் மீடியாவில் பகிர்ந்துள்ள பகீர் கருத்து அதனை நிரூபித்துள்ளது. 

Famous Singer SP Balasubramaniyam Upset For Modi Selfi With Bollywood Stars
Author
Chennai, First Published Nov 3, 2019, 3:33 PM IST

உங்களால மட்டும் எப்படி பிரதமர் கூட செல்ஃபி எடுக்க முடிஞ்சாது... வருத்தத்தை பகிர்ந்த எஸ்.பி.பி...!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழகத்தை புறக்கணித்து வருவதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த சமயத்தில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சோசியம் மீடியாவில் பகிர்ந்துள்ள பகீர் கருத்து அதனை நிரூபித்துள்ளது. காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, அக்டோபர் 19ம் தேதி பாலிவுட் பிரபலங்களுக்கு பிரதமர் மோடி விருந்தளித்தார். பிரதமரது இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காந்திக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

Famous Singer SP Balasubramaniyam Upset For Modi Selfi With Bollywood Stars

இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ஷாரூக்கான், அமீர் கான் உடன் கங்கனா ரணாவத், போனி கபூர், சோனம் கபூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு தென்னிந்திய பிரபலங்களை அழைக்காதது கவலை அளிப்பதாக பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது முகநூலில் வெளியிட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Famous Singer SP Balasubramaniyam Upset For Modi Selfi With Bollywood Stars

அதில் அக்டோபர் 29ம் தேதி பிரதமர் அளித்த விருந்தில் நான் பங்கேற்றேன். பிரதமர் வீட்டிற்குள் நுழையும் போது எங்கள் அனைவரின் செல்போன்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக வாங்கி வைக்கப்பட்டன. ஆனால் அதே நாளில் பிரதமருடன் பாலிவுட் பிரபலங்கள் சிலர் எடுத்த செல்ஃபி சமூக வலைத்தளங்களில் வைரலானது. சில விஷயங்கள் நம்மை வாயடைக்க வைக்கும் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம் பிரதமர் மோடி வீட்டிற்குள் செல்போன் கொண்டு செல்ல பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் மோடி பாரபட்சம் பார்க்கிறார் என்ற கருத்தும் வலுவாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios