இங்கிலாந்தைச் சேர்ந்த பாய் பெட்டர் நோ என்ற புகழ் பெற்ற இசைக்குழுவில் பாடகராக இருப்பவர் ஆன்டி அனோகி. லண்டனில் உள்ள பிரிஸ்டல் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இவர், பெண்களை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பகீர் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

ஆன்டியால் பாதிக்கப்பட்ட 4 பெண்கள் கொடுத்துள்ள புகாரில், ஆயுதங்களை காட்டி மிரட்டி, கொடுமைப்படுத்தியதாகவும், தங்களை பாலியல் பலாத்காரம் செய்வதை தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து மிரட்டியதாகவும் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர். ஆனால் இதை எதையுமே மறுக்காத பாடகரோ, பெண்களை மிரட்டி பார்ப்பது எனக்கு பிடிக்கும், அதனால் அப்படி செய்தேன். ஆனால் அந்த 4 பெண்களும் என்னுடன் விருப்பப்பட்டு தான் அப்படி இருந்தார்கள் என நீதிமன்றத்தில் கூறியுள்ளார். 

 

ஆன்டியின் செல்போனில் இருந்த கற்பழிப்பு வீடியோக்கள் மிகவும் கொடூரமாக இருந்ததாகவும், அதனால் அவற்றை 2 மீடியாவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே காட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆன்டி மீது கொடுக்கப்பட்டுள்ள 21 பாலியல் புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு பிரிஸ்டல் கிரவுன் நீதிமன்றம் 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெண்களை கொடுமைப்படுத்தி கொடூர சுகம் காணும் மனநிலைக்கு ஆன்டி அடிமையாகிவிட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.