திருமண நாளில் நல்ல செய்தி சொன்ன சீரியல் நடிகை... குவியும் வாழ்த்துக்கள்!
தங்களது 13வது திருமண நாளில் இரண்டாம் முறை கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
சன் தொலைக்காட்யில் ஒளிபரப்பான வாணி ராணி, தாமரை, செல்லமே, அத்திப்பூக்கள், கோலங்கள் போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நீலிமா ராணி. கோலிவுட்டிலும் கமலின் தேவர் மகன் படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதில் இருந்து மொழி, தம், ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம் குற்றம் 23, பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சீரியல், சினிமா, தொகுப்பாளினி, தயாரிப்பாளர் என பல அடையாளங்களைக் கொண்டுள்ள நடிகை நீலிமா ராணி, சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடன் சீரியலில் நடித்த அஷ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தையும் உள்ள நிலையில், தங்களது 13வது திருமண நாளில் இரண்டாம் முறை கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
நீலிமா தனது திருமண நாளை முன்னிட்டுசோசியல் மீடியாவில் கணவர் மற்றும் மகளின் புகைப்படங்களைப் பகிர்ந்து, ஜனவரியில் நாங்கள் நான்காகப் போகிறோம். 20 வாரங்கள் முடிந்துவிட்டது! இன்னும் 20 போக வேண்டும் !!! எங்களுக்கு மகிழ்ச்சி!” என குறிப்பிட்டுள்ளார்.