famous serial actor death in sabarimalai

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'வாணி ராணி', 'வள்ளி' ஆகிய சீரியல்களில் நடித்து வருபவர் நடிகர் தேசிங்கு.

கோவையைச் சேர்ந்த இவர் முக்கிய வேலை காரணமாக சபரிமலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இவர் நேற்று சபரிமலை அருகே உள்ள சரங்குத்தி என்கிற இடத்தில் வந்துக்கொண்டிருந்த போது திடீர் என மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக இவரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆயத்தம் ஆகினர். ஆனால் துரதஷ்டமாக இவர் அதற்கு முன்பே இறந்தார்.

இவரது மரணம் குறித்து அறிந்த சின்னத்திரை பிரபலங்கள் பலர் இவருடைய குடும்பத்திற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.