கொரோனா வைரஸின் தாக்கத்தால் திரையுலகினர் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. திரையுலகை பொறுத்தவரை அமிதாப் பச்சனில் தொடங்கி நடிகை தமன்னா வரை பலரையும் கொரோனா பாடாய் படுத்தி வருகிறது. தற்போது ஷூட்டிங் வேலைகள் வேறு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் நடிகர், நடிகைகள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: Rare Photos: ஷூட்டிங் ஸ்பாட்டில் அசின் அடித்த லூட்டி... வாய்பிளக்கும் விஜய், அஜித், சூர்யா....!

தற்போது பிரபல தயாரிப்பாளர் கேஎஸ்கே சதீஷ்குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராம் இயக்கிய தங்க மீன்கள்,  ஆன் ட்ரியா நடித்த தரமணி, பிரம்மா இயக்கிய குற்றம் கடிதல் மற்றும் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். 

 

இதையும் படிங்க: “ஆள் பாதி; ஆடை பாதி”... மிரள வைக்கும் லுக்கில் கவர்ச்சி அதிர்ச்சி கொடுத்த யாஷிகா...!

கடந்த சில நாட்களாகவே காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டதாகவும்  அதன் பின்னர் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார். சில நாட்களாக என்னைச் சந்தித்தவர்களும் டெஸ்ட் எடுத்து பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.