திரையுலகை சேர்ந்த பலர் அடுத்தடுத்து, கொரோனா மற்றும் உடல்நல குறைவு காரணமாக, மரணமடையும் செய்திகள் கடந்த வருடத்தை விட இந்த வரும் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.  

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழ் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர் ஜி.ஆர் ராமச்சந்திரன். 73 வயதாகும் இவர், சமீப காலமாகவே உடல் நலக்குறைவு காரணமாக அவதி பட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை இவர், காலமாகி விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் தமிழ், மற்றும் கன்னட திரையுலகை சேர்ந்த பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பிரபலங்கள் சமுக வலைத்தளம் மூலமாக இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தயாரிப்பாளர் ஜி.ஆர். தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படங்களை தயாரித்துள்ளார். குறிப்பாக நாட்டுப்புற பாட்டு, எட்டுபட்டி ராசா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ’மனுநீதி’ ’சவுண்ட் பார்ட்டி’ ’எங்க ராசி நல்ல ராசி’ போன்ற தமிழ் படங்களையும் சில கன்னட திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். 

கொரோனா, மாரடைப்பு, உடல்நல குறைவு காரணமாக அடுத்தடுத்து முக்கிய திரையுலக பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம் அடைவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிபிடித்தக்கது.