கொரோனா தொற்று  காரணமாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம், திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சமீப காலமாக, பாலிவுட், கோலிவுட், டோலிவுட், என தென்னிந்திய திரையுலகில் பல எதிர்பாராத மரணங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. மேலும் கொரோனா தொற்றாலும், பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் போக்குரி ராமா ராவ் கொரோனா தொற்று காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மரணமடைந்தார். 65 வயதாகும் இவர், பல முன்னணி நடிகர்கள் நடித்த வெற்றி படங்களை தயாரித்துள்ளார். 

சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவருக்கு கொரோனா பரிசோதனை செய்த போது, கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரை தனிமை படுத்தி மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தனர். மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டதால் அவருடைய உடல்நிலை நாளுக்கு நாள் மோசமானது. எனவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபப்ட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இவருடைய மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவருடைய இறுதி சடங்குகள் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.