கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால் தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மது கிடைக்காத குடிமகன்கள் பிற பகுதிகளுக்குச் சென்று மதுபாட்டில்களை சட்ட விரோதமாக கடத்தி வர ஆரம்பித்துள்ளனர். இதை தடுப்பதற்காக சென்னையில் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. போலீசார் இரவு, பகல் பாராமல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

சமீபத்தில் சென்னைக்கு காரில் சரக்கு பாட்டில்களை கடத்தி வந்ததாக பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் காரை சோதனை செய்த போலீசார். அதில் இருந்து 96 பீர் பாட்டில்கள், 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ரம்யாகிருஷ்ணனின் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னை மதுரவாயல் அருகே  போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டியிருந்த வாகனத்தை சோதனையிட்டனர். அதில் இருந்தவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுவ சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

அப்போது காரில் ஏராளமான மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதில் ஒருவர் சாருஹாசனின் நடித்த தாதா 87 படத்தை தயாரித்த கலைச்செல்வன் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவர் மீது மது கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.