பட்டியல் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சேகர். இந்த படத்தை தொடர்ந்து இவர் பட்டியல் சேகர் என அழைக்கப்பட்டார். 63 வயதாகும் இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதி பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை சேகருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்ப்பட்டது. உடனடியாக இவரை குடும்பத்தினர் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். 

மறைந்த சேகர், இயக்குனர் விஷ்ணுவர்தன் மற்றும் நடிகர் கிருஷ்ணாவின் தந்தை ஆவார். 

பட்டியல் படத்தை தொடர்ந்து இவர் கழுகு, அலிபாபா உள்ளிட்ட படங்களை தயாரித்தது மட்டும் இன்றி ராஜதந்திரம் படத்தில் வில்லனாக நடித்து பலரது பாராட்டுக்களைப் பெற்றார்.

பட்டியல் சேகரின் உடல் அஞ்சலிக்காக, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவருடைய உடலுக்கு தொடந்து பல பிரபலங்கள் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இன்று மாலை இறுதிச்சடங்கு நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.