*    தர்பார் டிரெய்லரை பார்த்த பலர் ‘இது ஏ.ஆர்.முருகதாஸ் படம் போல் இல்லை. வழக்கமான ரஜினியின் மாஸ் ஜால்ரா படம் போல் உள்ளது.’ என்று கடுப்பாகி, விமர்சிப்பதாக ஏஸியாநெட் தமிழ் இணையதளம்  ஒரு தகவலை பிரேக் செய்தது. இன்று பல மீடியாக்களில் இந்த கருத்து வலம் வர துவங்கியுள்ளது. ரஜினியின் விசிறியல்லாத, பொது சினிமா ரசிகர்கள் இப்படித்தான் கழுவி ஊத்துகின்றனர். 

*    லண்டனின் உலகப் புகழ் பெற்ற மேடம் டுசாட்ஸ் மெழுகு சிலை அருங்காட்சியகத்தின் சார்பில் சிங்கப்பூரிலும் ஒரு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலையை வைக்க இருக்கிறார்கள். அதற்காக அவரது உடல் அளவெடுக்கப்பட்டது. இந்த பெருமையால் காஜல் துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறார். 
அதேவேளையில் ‘காஜல் இந்திய சினிமா துறையில் கூட வேண்டாம், தென்னிந்திய சினிமா துறையிலாவது என்ன சாதித்துவிட்டார்! என்று இந்த சிலை?’ என பெரும் விமர்சனம் வெடித்துள்ளது. 

*    பிரபுதேவா இயக்கத்தில் பாலிவுட் கிங் சல்மான் கான் ஹீரோயிஸம் பண்ண, சோனாக்ஸி சின்ஹா நடித்திருக்கும் ‘தபாங்’ படத்தின் மூன்றாவது படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகிறது. இப்படம்  பிரபுதேவாவுக்காக தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இம்மூன்று மொழிகளிலும் சோனாக்‌ஷிக்காக ‘அட்டக்கத்தி’ நந்திதா டப்பிங் பேசியுள்ளார். 

*    தல அஜித் நடிக்கும், வலிமை படத்தின் ஹீரோயினாக அவர், இவர் என்று இழுத்துக் கொண்டே இருக்கின்றனர். நயன் தாரா! என்றார்கள், யாமினி கவுதம்! என்றார்கள். இதோ இப்போது ஒல்லி இடுப்பழகி இலியானாவிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். தல லெவலுக்கு அனுஷ்காவை இறக்கலாம்! பக்கா ஜோடியாக இருக்கும். நயன் ஓ.கே.தான் ஆனால் தொடர்ந்து பார்த்து போர் அடிக்கிறாது! என்கின்றனர் தல ரசிகர்கள். இதை இயக்குநர் விநோத்தும், தலயும் கவனித்தாக வேண்டும். 

*    தமிழ் சினிமாவை விட்டு ‘இடுப்பு’ கலாசாரம் மறைந்து வெகு காலம் ஆகிவிட்ட நிலையில், சமீபத்தில் இடுப்பு மடிப்பை  காட்டி, போட்டோ ஷுட் நடத்தி அதை வெளியிட்டு வைரலாக்கினார் நடிகை ரம்யா பாண்டியன். ஆனாலும் பொண்ணுக்கு எந்த வாய்ப்பும் வரவில்லை சினிமாவில். எனவே இப்போது கிளாமரை தாண்டி கவர்ச்சியாக, செக்ஸியாக போட்டோ ஷுட் நடத்தி வைரலாக்கி இருக்கிறார்.