கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, பிரபல இசையமைப்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, பிரபல இசையமைப்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மீண்டும் கோரமுகத்தை காட்டி, மக்களை அச்சுறுத்தி வருகிறது கொரோனா. மேலும், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் பலர், நல்ல விதமாக குணடைந்தாலும், எதிர்பாராத சில மரண சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது.

அந்த வகையில், பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து ஏ.ஆர்.ரகுமான் உள்பட பல திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

பாலிவுட்டில் திரையுலகில், பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ள இரட்டையர்கள் நதிம்-ஷர்வன். 90 களில் இவர்கள் இசையில் வெளியான பல பாடல்கள் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. இணைபிரியாத சகோதரர்களாக இருந்த இவர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து தனித்தனியே இசையமைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஷ்ரவனுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி ஷ்ரவன் உயிரிழந்தார். இதை தொடர்ந்து இவருக்கு, பாலிவுட் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்கள் பலர் சமூக வலைத்தளம் மூலமாக தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அதே போல், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானும் தற்போது ஷ்ரவனுக்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இவரது இழப்பு பாலிவுட் இசை ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Scroll to load tweet…