Lover Movie Teaser : தமிழ் சினிமாவின் மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு தற்பொழுது நாயகனாக மாறியுள்ள நடிகர் தான் மணிகண்டன். அவருடைய நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் லவ்வர்.

துவக்கத்தில் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கலில் பங்கேற்று அதன் பிறகு பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து, புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் வெளியான "விக்ரம் வேதா" திரைப்படத்தின் மூலம் நடிகராகவும், வசனகர்த்தாவாகவும் அங்கீகாரம் பெற்ற நடிகர் தான் மணிகண்டன். அன்று தொடங்கி இன்று வரை இவருடைய தனித்துவமான நடிப்பு பலரால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. 

குறிப்பாக "ஜெய் பீம்" திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த "ராஜாக்கண்ணு" என்கின்ற கதாபாத்திரம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் இவரை திரும்பிப் பார்க்க வைத்தது என்று கூறினால் அது மிகையல்ல. தற்பொழுது நாயகனாக களமிறங்கியுள்ள மணிகண்டன், இவ்வாண்டு வெளியான "குட் நைட்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

Scroll to load tweet…

இந்த சூழ்நிலையில் இப்பொது அறிமுக இயக்குனர் பிரபு ராம் என்பவருடைய இயக்கத்தில் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகின்ற "லவ்வர்" என்கின்ற திரைப்படத்தில் ஒரு கல்லூரி மாணவரின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் மணிகண்டன். இந்நிலையில் இன்று இந்த திரைப்படத்தினுடைய டீசர் வெளியாக உள்ளது. 

Scroll to load tweet…

இந்நிலையில் அதனை அறிவிக்கும் வகையில் ஒரு சூப்பர் ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டுள்ளார் மணிகண்டன். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், பார்க்கில் தன் காதலி திவ்யாவோடு இருப்பதை போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். லவ்வர் திரைப்படத்தில் மணிகண்டனுக்கு நாயகியாக நடிக்க உள்ள நடிகையின் பெயர் ஸ்ரீ கௌரி பிரியா. இவர் ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார், அது மட்டுமல்லாமல் கடந்த 2018 ஆம் ஆண்டு மிஸ் ஹைதராபாத் பட்டத்தை வென்றவரும் இவர்தான்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.