கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், துரதஷ்ட வசமாக பல உயிர்களை உலகளவில் கொரோனா கொன்றுவிட்டது. இதுவரை இதற்கான மறுத்து கண்டுபிடித்து விட்டதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் உலக அளவில் பல ஆராச்சியாளர்கள் கொரோனா மருந்தை கண்டுபிடிக்க போராடி வருகிறார்கள். 

கொரோனா கோர தாண்டவம்:

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், துரதஷ்ட வசமாக பல உயிர்களை உலகளவில் கொரோனா கொன்றுவிட்டது. இதுவரை இதற்கான மறுத்து கண்டுபிடித்து விட்டதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் உலக அளவில் பல ஆராச்சியாளர்கள் கொரோனா மருந்தை கண்டுபிடிக்க போராடி வருகிறார்கள்.

தொடரும் சோகம்:

கொரோனாவில் இருந்து இளம் வயதினர் மற்றும் நடுத்தர வயதினர் பலர் மீண்டு, உடல் நலம் தேறி வந்தாலும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கொரோனாவால் தாக்கப்பட்டால் அவர்களை மீட்பது மருத்துவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

அந்த வகையில் நேற்று ஜாஸ் பட நடிகை ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், தற்போது ஹாலிவுட் பட நடிகர், ஜய் பெனடிக்ட் உயிரிழந்துள்ளார்.

பிறந்த நாள் கொண்டாட்டம்:

68 நடிகர் ஜய் பெனடிக்ட், Aliens, The Dark Knight Rises போன்ற பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். கடந்த வாரம் தான் இவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், திடீர் என இவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது இவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இவருக்கு தொடர்ந்து ரசிகர்களும், பிரபலங்களும் சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.