இயக்குனர் அட்லீ தன்னுடைய முதல் படத்திலேயே ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர் அட்லீ. இவர் தயாரிப்பில் அடுத்ததாக உருவாகும் படம் ஒன்றில், பிரபல ஹீரோ நடிகர் வில்லனாக அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் அட்லீ தன்னுடைய முதல் படத்திலேயே ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர் அட்லீ. இவர் தயாரிப்பில் அடுத்ததாக உருவாகும் படம் ஒன்றில், பிரபல ஹீரோ நடிகர் வில்லனாக அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லீயின் முதல் படம் பிரபல இயக்குனரின் சூப்பர் ஹிட் படத்தை அட்ட காப்பி அடித்தது போல எடுக்கப்பட்டது என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் அது அனைத்தையும் தாண்டி 'ராஜாராணி' திரைப்படம் அவரை சிறந்த இயக்குனர் என, ரசிகர்கள் மத்தியில் நிலை நிறுத்தியது. அதன்பின் தளபதி விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என அடுத்தடுத்த படங்களை தளபதிக்கே இயக்கி ஹார்டிக் வெற்றி கொடுத்தார். இந்த படங்களும் சில காபி சர்ச்சையில் சிக்கினாலும் அதனை மறக்க வைக்கும் அளவிற்கு வசூல் மற்றும் விமர்சனங்கள் இருந்தது.

படம் இயக்குவதை தாண்டி, சில படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார் அட்லீ, அந்த வகையில்... ஏற்னகனவே நடிகர் ஜீவா நடித்த 'சங்கிலி புங்கிலி கதவ தொற', மட்டும் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்த 'அந்தகாரம்' ஆகிய படங்களை தயாரித்த இவர், மூன்றாவதாக ஒருபடத்தை தயாரிக்க உள்ளதாக கோலிவுட் திரையுலகில் பேச்சு அடிபட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, 'அட்லீ' தன்னுடைய உதவி இயக்குனர் ஒருவர் இயக்க உள்ள படத்தை தயாரிக்க உள்ளாராம்.

புதுமுக ஹீரோ நடிக்கும் இந்த படத்தில், வில்லனுக்கு வெயிட் கேரக்டர் என கூறப்படுகிறது. இந்த வில்லன் கதாபாத்திரத்தை... அட்லீயின் முதல் படமான 'ராஜா ராணி' படத்தில் செம்ம சாப்ட் ஹீரோவாக நடித்த ஜெய் ஏற்று நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஒரே மாதிரியான ஹீரோ சப்ஜெட் கதைகள் வருவதால், தன்னுடைய நடிப்பை வித்தியாசப்படுத்தி வெளிக்காட்டவே இந்த வில்லன் கதாபாத்திரத்தை ஜெய் ஏற்று நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் குறித்து இதுவரை அதிகார பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், விரைவில் படம் குறித்து வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போது கொரோனா நேரம் என்பதால், அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்க உள்ள திரைப்படம் தள்ளி கொண்டே செல்லும் நிலையில், அப்படியே இந்த படத்தையும் தயாரிக்க அட்லீ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.