சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'காலா' படத்தில் போட்டி போட்டு நடித்து சிறந்த வில்லன் நடிகர் என, தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நானா படேகர். இவர் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'அப் டக் சாப்பான்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்ப்பார்த்தை விட பல மடங்கு வசூல் சாதனை படைத்தது. 

இந்த படத்தில் கதாசிரியராக பணியாற்றியவர் 32 வயதுதான ரவிஷங்கர் அலோக், இந்த படத்தை தொடர்ந்து பல பாலிவுட் வெற்றி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். 

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவர் மன அழுத்ததில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதைதொடர்ந்து நேற்று ரவிஷங்கர் அலோக், யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் மதியம் 2 மணி அளவில் மும்பை அந்தேரியில் உள்ள அவருடைய வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அவர் வீட்டின் காவலாளி கொடுத்த, புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்.

மனஅழுத்தம் காரணமாக இளம் கதாசிரியர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.