திரைப்பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாவது வழக்கமானது தான். இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் பூரி ஜெகன்நாத்தின் மகன் ஆகாஷ் பூரி. உயரிய விருதான நந்தி விருதை பெற்ற பூரி ஜெகன்நாத் 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். அதில் பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். 

2018 ல் மெஹபூபா என்ற படத்தை இயக்கி மகன் ஆகாஷ் பூரியை இதில் ஹீரோவாக்கினார். தற்போது அவர் மீண்டும் ரொமாண்டிக் என்ற படத்தை ஆகாஷை வைத்து எடுத்து வருகிறார். பூரி ஜெகன்நாத் கதை, வசனம் எழுதியுள்ள இப்படத்தை அனில் பாதுரி இயக்கி வருகிறார். 

இந்த படத்தில் பையனை குஷிபடுத்துவதற்காக ஹீரோயின் கேட்டிமா ஷர்மாவுடன் ஏகப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள், லிப் லாக் சீன்களை வைத்துள்ளார் பூரி. ரம்யா கிருஷ்ணன், சுனைனா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் போஸ்டர் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. காரணம் என்னவென்றால்,  கேட்டிமா ஷர்மாவுக்கு ஆகாஷ் கொடுத்த முரட்டு லிப் லாக் சீன் அதில் இடம்பெற்றுள்ளது.