Asianet News TamilAsianet News Tamil

இது சினிமா இல்ல... லைக் வாங்குறதுக்காக இஷ்டத்துக்கு பேசாதீங்க... ஹரியை தெறிக்கவிட்ட பிரபல இயக்குநர்....!

ஒரு சில கருப்பு ஆடுகள் இருப்பதற்காக ஒட்டுமொத்த போலீஸ் துறையையும் பொதுவாக விமர்சிப்பதை நிறுத்தவேண்டும். இப்படிப் பட்ட கருப்பு ஆடுகள் பல துறைகளிலும் இருக்கிறார்கள்.
 

Famous Director Critic Director Hari Tweet Regarding Sathankulam Issue
Author
Chennai, First Published Jun 30, 2020, 2:20 PM IST

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் கொடூரமாக தாக்கியதால் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிஸ் ஆகியோர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தந்தை, மகன் இறப்பு குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.

Famous Director Critic Director Hari Tweet Regarding Sathankulam Issue

இதற்கிடையே, காவல்நிலைய இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள் மற்றும் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சாத்தான்குளம் காவல்நிலைஅய்த்தில் பணியாற்றிய பிற காவலர்களும் வேறு இடங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே ஜெயராஜ் ஜெயராஜ் போலீஸ் வாகனத்திலும், பென்னிக்ஸ் அவரது நண்பரின் பைக்கிலும் ஏறி காவல் நிலையம் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கூட்டியுள்ளது. 

Famous Director Critic Director Hari Tweet Regarding Sathankulam Issue

தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்திற்கு திரைத்துறையினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அப்படி தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் ஹரி நேற்று முன் தினம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், "சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக் கூடாது. அதற்கு ஒரே வழி சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தியுள்ளது. காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிகமிக வேதனைப்படுகிறேன்" என குறிப்பிட்டிருந்தார். 

Famous Director Critic Director Hari Tweet Regarding Sathankulam Issue

 

இதையும் படிங்க: சரிய இருந்த விஜய்... தட்டித்தூக்கிய அட்லி.... தளபதி ரசிகர்களுக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்கார் தெரியுமா?

ஹரியின் இந்த கருத்தை கண்டிக்கும் விதமாக பிரபல இயக்குநர் அருண் வைத்தியநாதன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  "சாத்தான்குளம் சம்பவத்தை கண்டிக்கும் அதே அளவுக்கு, ஒட்டுமொத்த போலீஸ் துறையினரும் கெட்டவர்கள், காட்டு மிராண்டித்தனமானவர்கள் என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. கோவிட் 19 பரவ துவங்கிய நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் போலீஸ் துறை பல்வேறு விஷயங்களை முன்னெடுத்து செய்தது என்பதை மறந்து விடாதீர்கள். ஒரு சில கருப்பு ஆடுகள் இருப்பதற்காக ஒட்டுமொத்த போலீஸ் துறையையும் பொதுவாக விமர்சிப்பதை நிறுத்தவேண்டும். இப்படிப் பட்ட கருப்பு ஆடுகள் பல துறைகளிலும் இருக்கிறார்கள்."

"குறிப்பாக.. சில சினிமா துறை நட்சத்திரங்கள் தாங்கள் போலீஸ் ரோலில் நடித்ததற்கும், போலீசை பெருமை படுத்தி படம் எடுத்ததற்கு வெட்கப்படுவதாக கூறி உள்ளனர். இது சினிமா ஸ்கிரிப்ட் இல்லை. கொஞ்சம் இடைவெளி கொடுங்கள். சில லைக்குகள் மற்றும் ரீட்வீட்களுக்காக இப்படி எமோஷனலாக பேசாதீர்கள்."

இதையும் படிங்க: கவர்ச்சியில் யாஷிகா ஆனந்தையே அலேக்காக ஓரங்கட்டிய தங்கை... 18 வயசிலேயே குட்டை உடையில் கொடுத்த கிளாமர் போஸ்கள்!

"இதை ஒரு தனிப்பட்ட சம்பவமாக மட்டுமே நடத்துங்கள். உண்மையை ஆராய்ந்து அதன் பின்னால் உள்ளவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும். அதே நேரத்தில் ஒட்டுமொத்த போலீஸ் துறையையும் தவறாக சித்தரிக்க வேண்டாம். ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் குடும்பத்திற்காக நான் பிராத்தித்து கொள்கிறேன். நீதி விரைவில் வழங்கப்படும் என நம்புகிறேன்" என கூறி உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios