RRR movie : ஆர்.ஆர்.ஆர் பெயரில் ‘காண்டம்’ விளம்பரம்... புரமோஷனுக்காக இப்படியா என கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்
RRR movie : RRR என்பது ஒரு பிராண்டாகவே மாறிவிட்டது. அதனைப் பயன்படுத்தி பல முன்னணி நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இப்படத்தை விளம்பரப்படுத்துகின்றன.
ரூ.600 கோடி வசூல்
மாவீரா, நான் ஈ, பாகுபலி என அடுத்தடுத்து பிரம்மாண்ட ஹிட் படங்களை கொடுத்த ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீசான படம் ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் நாயகர்களாக நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
RRR பெயரில் காண்டம் விளம்பரம்
‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து RRR என்பது ஒரு பிராண்டாகவே மாறிவிட்டது. அதனைப் பயன்படுத்தி பல முன்னணி நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இப்படத்தை விளம்பரப்படுத்துகின்றன. அந்த வகையில் தற்போது, ஒரு ஆணுறை நிறுவனம் தங்கள் தயாரிப்பை பிரபலப்படுத்தும் விதமாக RRR-ஐ பயன்படுத்தி வித்தியாசமான விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பிரபலமான ஆணுறை பிராண்டுகளில் ஒன்று ஸ்கோர். இந்நிறுவனம் தான் தற்போது RRR-ஐ பயன்படுத்தி விளம்பரம் செய்து உள்ளது. RRR படத்தின் கருப்பொருளான நெருப்பு மற்றும் நீரை ஒத்திசைந்து, அந்நிறுவனம் தாங்கள் சூடான மற்றும் குளிர்ச்சியான ஆணுறைகளை தயாரித்துள்ளதாக விளம்பரப்படுத்தி வருகின்றன. மேலும் RRR என்பதற்கு ரா ரெஸ்பான்சிபிள் ரொமான்ஸ் என்று புது விளக்கமும் கொடுத்துள்ளனர்.
நெட்டிசன்கள் எதிர்ப்பு
இந்த விளம்பரம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதன்மூலம் தங்களுக்கு புரமோஷன் கிடைப்பதால் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவும் இதைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இருப்பினும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படத்தை இப்படி காண்டம் விளம்பரத்திற்காக பயன்படுத்துவதற்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன.
இதையும் படியுங்கள்... Losliya : தொடை தெரிய கவர்ச்சி போஸ்... திடீரென கிளாமர் ரூட்டுக்கு மாறிய லாஸ்லியா - போட்டோ பார்த்து ஷாக்கான Fans