ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கே.ஜி.எஃப் சேப்டர் 2 படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றிய தகவலை, புதிய போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர் படக்குழுவினர். 

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கே.ஜி.எஃப் சேப்டர் 2 படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றிய தகவலை, புதிய போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கன்னட திரையுலகின் பிரம்மாண்டமான கே.ஜி.எஃப் படத்தின் வெற்றி ஓட்டுமொத்த திரையுலகையும் வாய் பிளக்க வைத்தது. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்த நிலையில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கேஜிஎஃப் சேப்டர் 2 எடுக்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியிலும் இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் சமீபத்தில் இத்திரைப்படம் ஜூலை 16ம் தேதி தியேட்டரில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டியுடன் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த ரசிகர்களும் வெறித்தனமாக இந்த படத்தை காண வெயிட்டிங்கில் உள்ளனர். மேலும் அவ்வப்போது இந்த படம் குறித்த தகவலையும் படக்குழு வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ள பிரபல தயாரிப்பு நிறுவனம் குறித்து தெரிவித்து போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி கே.ஜி.எஃப் சேப்டர் 2 படத்தை பல வெற்றி படங்களை தயாரித்துள்ள ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த தகவல் தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. 


Scroll to load tweet…