பிரபல காமெடி நடிகை, தனுஷின் உறவுக்கார பெண்ணாக இருந்தாலும் அதனை சற்றும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் உள்ளார். அவர் யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

அந்த காமெடி நடிகை வேறு யாரும் இல்லை, புசு புசு உடலை தற்போது சரசரவென குறைத்து, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள நடிகை வித்யுலேகா ராமன் தான். இவர் தனுஷுக்கு எந்த விதத்தில் உறவு முறை என்றால், திரைப்படங்கள் இயக்குவதில், தொடர்ந்து வித்தியாசம் காட்டி வரும் இயக்குனர்களில் ஒருவரும், நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவன் இரண்டாவது மனைவி கீதாஞ்சலியின் தங்கை தான் இவர். 

அதாவது, வித்யூலேகா ராமனின் தந்தையும், காமெடி நடிகருமான மோகன் ராமனின் சகோதரர் பி.எஸ்.ராமனின் மகள் தான் கீதாஞ்சலி. கீதாஞ்சலி குண்டாக இருந்த போது பார்த்தீர்கள் என்றால், அசப்பில் ஒரு ஜாடையில் வித்யுலேகா மாதிரியே  இருப்பாங்க. 

அந்த விதத்தில் பார்த்தல், தனுஷும், செல்வராகவனும், வித்யுலேகா ராமனுக்கு மாமன் முறை. ஆனால் இந்த உறவு முறைகளை வித்யுலேகா ராமன் பெரிதாக வெளிப்படுத்தி கொள்வது இல்லை. 

தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன படத்தில், துணை இயக்குனராக பணியாற்றிய போது கீதாஞ்சலி, அந்த படத்தின் இயக்குனர் செல்வராகவனை மனதிற்க்கு பிடித்து போனதால் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதி தங்களுடைய குழந்தைகளுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும், வித்யுலேகா ராமன் தன்னுடைய அக்காவுக்கு போட்டியாக, போட்டி போட்டு உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. விடா முயற்சியோடு உடல் எடையை குறைந்திருக்கும் இவருக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.