இந்தி சின்னத்திரை காமெடி நடிகர் ராஜீவ் நிகாம். டிவி ஸ்டேன்ட் அப் காமெடி சீரியஸான “ஹர் ஷாக் பெ உலு” தொடர்களில் நடித்து பிரபலமானவர்.  இவர் நேற்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த பகீர் செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் மகன் இறந்த செய்தி தான் அது. 

காமெடி நடிகரான ராஜீவ் நிகாமின் பிறந்த நாளான நேற்று அவருடைய மகன் தேவராஜ் உயிரிழந்துள்ளது சின்னத்திரை வட்டாரத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ``இப்படியொரு சர்ப்ரைஸ் பிறந்தநாள் பரிசை யார் தருவார்கள்? என் மகன் தேவ்ராஜ் தனது பரலோக வாசஸ்தலத்திற்கு புறப்பட்டான்.என் பிறந்தநாள் கேக் கூட வெட்டாமல் போய்விட்டான் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

 

இதையும் படிங்க: சிக்கலில் சிக்கிய கமல்... நம்பி வச்ச இயக்குநரே வச்சி செஞ்ச காரியம்...!

இரண்டு வருடங்களுக்கு முன்பு, அதாவது 2018 மே மாதம் தனது மகன் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாக ராஜீவ் நிகாம் தெரிவித்தார். எனினும் மகன் உடல்நிலைக்கு என்ன நேர்ந்தது என்பது போன்ற விவரங்கள் எதையும் அவர் பகிரவில்லை. ஆனால் நிகாமுடன் நெருக்கமாக இருந்தவர், ருவர், ``நிகாம் மகன் தேவராஜ் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருநாள் விளையாட சென்று வீடு திரும்பிய பிறகு அவனின் உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரது மகன் கோமா நிலைக்குச் சென்றபின் ராஜீவின் வாழ்க்கை ஒரு கடுமையான திருப்பத்தை சந்தித்தது. இந்த சோகத்துக்கு மத்தியிலும் ``ஹர் ஷாக் பெ உலு” படப்பிடிப்பை சிரமத்துடன் முடித்து மக்களை சிரிக்க வைத்து கொண்டிருந்தார் ராஜீவ் நிகாம். அவர் தனது இந்த வெற்றிகரமான வாழ்க்கையை விட்டுவிட்டு, தனது குடும்பத்தின்மீது கவனம் செலுத்த முடிவு செய்து, மகனை கவனித்துக்கொள்வதற்காக தனது சொந்த ஊருக்கு திரும்பினார் என்று தெரிவித்துள்ளார்.