famous comedy actor commited vijay movie
இளைய தளபதி விஜய் தன்னுடைய 62ஆவது படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்தது தான். ஏற்கனவே இந்தப் படத்தில் பணியாற்றும் டெக்னீஷியன்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்தப் படத்தில் பிரபல காமெடி நடிகரும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் வேறு யாரும் இல்லை .. நடிகர் யோகி பாபு தான்! தன்னுடைய பேச்சால் மட்டும் இன்றி, உடல் மொழியாலும் காமெடியை வெளிப்படுத்தி ரசிகர்களை சிரிக்க வைக்கும் இவர், இந்தப் படத்தில் கமிட் ஆகியுள்ளதற்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
எப்போதுமே முருகதாஸ் விஜயை வைத்து இயக்கும் படங்களில் விஜய்க்கு நண்பராக ஒரு காமெடி நடிகரை நடிக்க வைப்பார்... உதாரணம் துப்பாக்கி படத்தில் சத்தியன், கத்தி படத்தில் சதீஷ் . அதே பாணியில் தான் இந்தப் படத்தில் விஜயுடன் படம் முழுவதும் வரும் ஒரு கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
