'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நடித்த நடிகையை, கட்டாயப்படுத்தி காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக அவருடன் தனிமையில் இருந்து விட்டு தற்போது, திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக, பிரபல ஒளிப்பதிவாளர் மீது நடிகை சாய் சுதா பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்திருந்தார். பிரபல ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு, தளபதி விஜய் நடித்த போக்கிரி உட்பட  பாலகிருஷ்ணா, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர்., ரவி தேஜா என பல தெலுங்கு ஸ்டார்களின்  படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

 

இதையும் படிங்க: வனிதா விரலில் மோதிரம் மாட்டிய மறுகணமே பீட்டர் பால் செய்த காரியம்... வைரலாகும் வீடியோ....!

அர்ஜுன் ரெட்டி புகழ் சாய் சுதா, எஸ்.ஆர்.நகர் போலீசில் கொடுத்த புகாரில் ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு, தன்னை கட்டாயப்படுத்தி காதலிக்க செய்தார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பயன்படுத்தி கொண்டு, தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கூறியுள்ளார். என்னை நம்ப வைத்து ஏமாற்றிய ஷியாம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். 

 

இதையும் படிங்க: ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் செம்ம கிளாமர்... 49 வயசிலும் கவர்ச்சியில் குறை வைக்காத ரம்யா கிருஷ்ணன்...!

சாய் சுதாவின் புகாரை அடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஷியாம் கே நாயுடுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து நானும், சாய் சுதாவும் சமரசம் ஆகிவிட்டோம் எனக்கூறி ஷியாம் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினார். அவரின் மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இதனால் அதிர்ச்சியான சாய் சுதா ஷியாம் மீது புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது ஷியாம் கே நாயுடு, சாய் சுதாவிடம் எவ்வித சமாதான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லையாம். மாறாக சாய் சுதாவின் கையெழுத்தை போலியாக போட்டு ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் தனது கையெழுத்தை போலியாக பயன்படுத்திய ஷியாம் கே நாயுடு மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அவரின் ஜாமீனை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

 

இதையும் படிங்க:  படுக்கையறையில் கணவருக்கு லிப்லாக்... முத்த போட்டோவிற்கு புதுவித விளக்கம் கொடுத்த வனிதா...!

இதையடுத்து நீதிமன்றம் ஷியாம் கே நாயுடுவின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சாய் சுதாவை ஏமாற்றிய வழக்கால் ஏற்பட்ட பிரச்சனையே இன்னும் தீராத நிலையில் போலி கையெழுத்து போட்டு புதுப் பிரச்சனையில் சிக்கியுள்ளார் ஷியாம் கே நாயுடு.