Famous Art Director GK Death

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான கலை இயக்குனர் கோபிகாந்த். GK என்றால் தான் திரையுலகில் பலருக்கும் இவரைத் தெரியும். 

60 வயதாகும் இவர் கடந்த சனிக்கிழமை அன்று உடல் நிலை சரி இல்லாமல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று அதிகாலை இவருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் உயிர் பிரிந்தது. இவருக்கு நாகவல்லி என்கிற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர்.

இவருடைய உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருடைய மறைவு குறித்து அறிந்த பிரபலங்கள் தொடர்ந்து இவருடைய குடும்பத்திற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படங்களில் கலை இயக்குனராகப் பணிபுரிந்த இவரின் கலைப் படைப்பில் மிகவும் சிறந்த படங்களாக இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான படங்கள், ரஜினியின் 'அருணாச்சலம்', 'பாபா', கமலின் 'அவ்வை ஷண்முகி', விஜயின் 'திருப்பாச்சி' மற்றும் 'சிவகாசி' ஆகிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.