கன்னட சினிமாவில் பிரபல தொகுப்பாளராகவும், ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர் சந்தன். கடந்த வாரம் தன்னுடைய நண்பர்களுடன் காரில் சென்ற போது, விபத்தில் சிக்கி சந்தன் உயிரிழந்தார். இவருடன் காரில் சென்ற மற்ற இரண்டு டிவி நடிகர்களும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தகவல் கன்னட திரையுலகினர் பலரை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தற்போது கணவர் சந்தன் இறந்த துக்கத்தை தாங்க முடியாத அவருடைய மனைவி மீனா, தன்னுடைய மகன் துர்ஷனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 

அதோடு தானும் ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். எதர்ச்சியாக சந்தன் வீட்டிற்கு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக உயிருக்கு போராடிய மீனாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு  தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தொகுப்பாளர் சந்தன் மரணத்தில் இருந்தே வெளிவராத பிரபலங்களுக்கு துர்ஷனின் மரணம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.