சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து அங்கிருந்து விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் இடையே பிரபலமானவர் ரியோ ராஜ். தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் ரியோ ராஜ், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ஹீரோவாக நடித்தார். பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். 

இதையும் படிங்க: அம்மா ஸ்ரீதேவியுடன் அழகு தேவதை ஜான்வி கபூர்...குட்டி பாப்பா முதல் க்யூட் ஹீரோயின் வரை அரிய புகைப்பட தொகுப்பு!

ரியோவின் மனைவி ஸ்ருதி சமீபத்தில் கர்ப்பமாக இருந்தார். சில நாட்களுக்கு முன்பு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் நிஜ வாழ்விலும் கணவன், மனைவியாக இணைந்த சஞ்சீவ்- ஆலியா மானசா தம்பதியும் தங்களது குழந்தைக்காக காத்திருக்கின்றனர். இரண்டு தம்பதிகளும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட சஞ்சீவ், ஒரே இயக்குனரிடம் ஹீரோவாக நடித்து, இப்போது ஒரே சமயத்தில் அப்பாவாக போகிறோம், அதே போல் ஒரே ஹாஸ்பிட்டலில் பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அந்த க்யூட் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது. 

இதையும் படிங்க: தர்பாரையே தட்டித்தூக்கிய "திரெளபதி"... ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலா?

இந்நிலையில் ரியோ ராஜ் - ஸ்ருதி தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சந்தோஷமான விஷயத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரியோ ராஜ், என் உலகத்தை ஆட்சி செய்ய இளவரசி வந்துவிட்டாள்.... ஆம், எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் செயும் நலம் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் ரியோ-ஸ்ருதி தம்பதிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.