பிரபல தனியார் தொலைக்காட்சியில், தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது திரைப்பட நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளவர் நடிகர் மா.கா.பா ஆனந்த். 

இந்நிலையில் இவர் அண்மையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கலந்துக்கொண்ட நிகழ்ச்சி ஒன்றை தொகுப்பாளினி பிரியங்காவுடன் இணைந்து தொகுத்து வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியின் போது, இவர் விளையாட்டாக ஒரு வயலினை தூக்கி போட்டு பிடித்தப்போது எதிர்பாராத விதமாக அது கீழே விழுந்து உடைந்துவிட்டது. இதன் விலை 15 லட்சமாம். இதனைக் கேட்டதும் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கி விட்டனர். மேலும் இந்த தொலைக்காட்சி நிறுவனமும் செம ஷாக் ஆகி விட்டதாம்.

இந்த தகவலை சமீபத்தில் மா.கா.பா ஆனந்த் விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட போது கூறியுள்ளார். 

இன்று அனைவராலும் நன்கு அறியப்பட்டிருக்கும் இவர், ஆரம்ப காலத்தில் சூரியன் எப்எம் வானொலியில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வந்தார். மேலும் ரேடியோ மிர்ச்சி வானொலியிலும் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இதைதொடர்ந்து தான் இவருக்கு விஜய் டிவி தொலைக்காட்சியில், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.  இது வரை,  'அது இது எது', 'சினிமா காரம் காபி' 'சூப்பர் சிங்கர்' உள்ளிட்ட நிகழ்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

மேலும் தற்போது திரைப்பட வாய்புகள் வந்தாலும், சின்னத்திரையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.