உலகம் முழுவதும் கொரோனா பிரச்சனையால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்தியாவில் தீயாய் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பதற்காக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க குறைவான நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதாலும், சமூக விலகலை கடைபிடிப்பது ஒன்றே தற்போதைய வழி என்பதாலும் நிறைய திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏராளமான திருமணங்கள் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் சிம்பிளாக அரங்கேறி வருகிறது.

இதையும் படிங்க: “இந்த இரண்டை மட்டும் செய்தால் போதும்”... குஷ்புவின் ஸ்லிம் லுக் ரகசியம்...!

இதில் திரைத்துறையின் முன்னணி பிரபலங்களும் அடங்குவர். நேற்று பிரபாஸின் "சாஹோ" பட இயக்குநர் சுஜித்திற்கும், பல் மருத்துவரான பிரவல்லிகா என்பவருக்கு எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதேபோல் பிரபல நடிகர் ராணாவிற்கும் அவருடைய காதலியான மிஹீகா பஜாஜுக்கும் ஆகஸ்ட் 8ம் தேதி நடைபெறவிருந்த திருமணம் வேறு தேதிக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: என்ன கொடுமை சார் இதெல்லாம்... வைரலாகும் “அன்றே கணித்த சூர்யா” மீம்ஸ்... ஸ்பெஷல் தொகுப்பு...!

ஐதராபாத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் திருமண ஏற்பாடுகளை நிறுத்த இருவீட்டாரும் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆகஸ்ட் 6ம் தேதி முதல்  8ம் தேதி வரை பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்த ராணாவின் பெற்றோர் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலரை கன்னட  நடிகை ஒருவர் எளிமையாக கரம்  பிடித்துள்ளார். கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த மயூரி கத்தாரி , குழந்தை பருவம் முதலே தனது நண்பரான அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துள்ளார். பெங்களூருவில் உள்ள லட்சுமி வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் நடந்துள்ளது. 

இதையும் படிங்க: நயன்தாராவின் பளபளக்கும் அழகிற்கான ரகசியம்... 35 வயதிலும் சும்மா நச்சுன்னு இருக்க காரணம் இதுதான்...!

தனது திருமண வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மயூரி, “ஆம் எனக்கு திருமணம் முடிந்தது.(12.06.2020) பத்து வருட நட்பு இன்று திருமணத்தில் முடிந்துள்ளது" என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். மயூரியின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.