பிரபல நடிகை சுனைனா தான் 4 வருடங்கலாக பலாத்காரம் செய்யப்பட்டதாக பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இணையதள செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நடிகை சுனைனா பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் மீ டூ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தனக்கு ஏற்பட்ட மீ டூ அனுபவங்களை நடிகை சுனைனா விரிவாக பேசியுள்ளார். 

அந்த பேட்டியில் சுனைனா கூறியதாவது:  எனக்கு அப்போது 12 வயது இருக்கும். நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஆட்டோவில் தான் எப்போதும் பள்ளிக்கூடத்திற்கு நான் செல்வேன். ஆட்டோவில் செல்லும் போது ஆட்டோ ஓட்டுனர் அருகில் அமர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்று எங்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால் அந்த ஆட்டோ ஓட்டுனர் என்னை தான் அவர் அருகில் உட்கார வைத்துக் கொள்வார்.

நான் இதனை பெருமையாக நினைத்துக் கொண்டு அவருக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்வேன். ஆட்டோவில் செல்லும் போது அந்த ஓட்டுனர் வெளியே சொல்ல முடியாத விஷயங்களை எல்லாம் செய்வார். அவர் என்ன செய்கிறார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரை தடுக்கவும் முடியவில்லை. இப்படியாக நான் 10 வகுப்பு முடிக்கும் வரை அந்த ஆட்டோ ஓட்டுனர் என்னை பலாத்காரம் செய்து கொண்டிருந்தார். 

பின்னர் தான் எனக்கு அந்த ஆட்டோ ஓட்டுனர் என்னிடம் என்ன செய்தார் என்பது தெரியவந்தது. அன்று முதல் எனக்கு அந்த ஆட்டோ ஓட்டுனர் மீது கடும் கோபம் இருந்தது. எனக்கு நேர்ந்த அவலத்தை நான் என் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் தற்போது அந்த ஆட்டோ ஓட்டுனரை தேடிக் கொண்டிருக்கிறேன். அவன் காலரை பிடித்து என்னை ஏன் அப்படி செய்தாய் என்று கேட்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறேன்.