famous actress stay in nithiyanantha asharamam

நடிகை ரஞ்சிதா 1992 ஆம் ஆண்டு 'நாடோடித் தென்றல்' படத்தில் கதாநாயகியாக அறிமுகம் கொடுத்து, தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் 50திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன், கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டதாகவும். இந்த வலி நித்தியானந்தா ஆஸ்ரமத்திற்கு சென்று ஒரு சில பயிற்சிகள் மேற்கொண்டதால் சரியானதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ரஞ்சிதா நித்தியானந்தாவின் பக்தராக மாறி தற்போது அவருடைய ஆசிரமத்திலேயே இருந்து சேவை செய்யத் தொடங்கிவிட்டார் என்பதும் பின் வெளிவந்த சர்ச்சைகளும் அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில் இப்போது 'சொல்லாமலே', 'வானத்தை போல', போன்ற பல வெற்றிப் படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வந்த நடிகை கௌசல்யாவும் நித்தியானந்தா ஆசிரமத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பெங்களூரைச் சேர்ந்த நடிகையான இவர் தற்போது 40 வயதைக் கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். மேலும் பல நாட்களாக எந்தத் திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த இவர் தற்போது பிரம்மா டாட் காம் , எங்கடா இவ்வளவு நாளா இருந்தீங்க ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.