ருத்ர தாண்டவம் ஆடிட்டிங்க கார்த்தி... "கைதி" படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை...

தீபாவளி டிரீட்டாக திரைக்கு வந்த கார்த்தியின் "கைதி" திரைப்படத்தை பிரபல காமெடி நடிகையான ஆர்த்தி ஆஹோ...ஓஹோன்னு புகழ்ந்து தள்ளியிருக்காங்க.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள "கைதி" படம் தீபாவளி ஸ்பெஷலாக நேற்று முன்தினம் வெளியாகி மாஸ் காட்டிக்கிட்டு இருக்கு."கைதி" பட கதையை கேள்விபட்ட விஜய் ரசிகர்கள் கூட, "பிகில்" பட டிக்கெட்டை கேன்சல் பண்ணிட்டு, "கைதி" படத்திற்கு போனதா சமூக வலைத்தளங்களில் தகவலகள் பரவியது. எப்பவுமே விஜய்யின் மாஸ் படத்திற்கு போட்டியாக வெளியாகும் பிரபல நடிகர்களின் படங்கள் கூட லேசா சறுக்கும். ஆனால் கார்த்தி நடிப்பில் வெளியாகியிருக்குற "கைதி" திரைப்படமோ பல தியேட்டர்களில் ஹவுஸ்புல்லா ஓடிக்கிட்டு இருக்கு. 

ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை இயக்குநர் அழகாக காட்சிப்படுத்தி, ஹாலிவுட் தரத்திற்கு படத்தை கொடுத்திருக்காருன்னு ரசிகர்களும் "கைதி" பட இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாராட்டிருக்காங்க. நிறைய பேர் கார்த்தியின் டில்லி கேரக்டர் கண்ணுலயே இருக்கு, "கைதி 2" படத்தை சீக்கிரம் ரெடி பண்ணுங்கன்னு அன்பு கட்டளை போட்டிருக்காங்க.<

/p>

திரைப்பிரபலங்கள் பலரும் கைதி படத்தை பற்றி பாசிட்டீவ் கமெண்ட் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. இதுக்கு இடையில, சமீபத்தில "கைதி" படத்தை பார்த்த நடிகை ஆர்த்தி, "தமிழ் சினிமாவில் புதுப்பாணி படம் இயக்குநரே, ஒவ்வொரு காட்சிகளையும் ரசித்தேன், சிவமைத்தன் கார்த்தி, சிவ பக்தனாக ருத்ர தாண்டவம் ஆடியிருக்காருன்னு" தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்துள்ளார். அதுமட்டுமில்லாமல், கைதி படத்தில் தட்டு நிறைய பிரியாணியை கொட்டி கார்த்தி சாப்பிடுறத, அப்படியே இமிட் பண்ணி போட்டோவையும் வெளியிட்டு இருக்காங்க.