பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும், தற்போது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருபவர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். இவர் மீது பிரபல தமிழ் பட நடிகை குற்றம் சாட்டியுள்ளது உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

லண்டனில் பிறந்து வளர்ந்த நடிகை நிகிஷா படேல் மாடலிங் செய்து கொண்டிருந்த போதே, 'புலி' என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகினார்.

இதைதொடர்ந்து கன்னடத்தில் இவர் அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான "SIIMA " விருதை பெற்றார். 

மேலும் தமிழில்,  'தலைவன்' படம் மூலம் அறிமுகமான நிகிஷா பட்டேல். அதன்பின், “என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன், 7 நாட்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய படங்களில் நடித்தார். தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் நடிக்க பேச்சு வார்த்தையும் நடத்தி வருகிறார்.

இவர்  தற்போது கேரளாவைச் சேர்ந்த இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். 

ஸ்ரீசாந்த், ஒரு நிகழ்ச்சியில் அவருடைய மனைவி புவனேஸ்வரியுடன் 7 வருடங்கள் காதலித்தது பற்றி விவரித்துள்ளார். இதை பார்த்து தான் தற்போது இதுவரை வெளிவராத தகவலை முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார் நிகிஷா.

இது குறித்து அவர் கூறியுள்ளது “ஸ்ரீசாந்தை விட்டுப் பிரிந்தபின் நான் அவரை சந்திக்கவேயில்லை. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்து வருகிறேன். புவனேஸ்வரியை அவர் திருமணம் செய்து கொள்வதற்கு முன் ஏழு வருடங்களாக காதலில் இருந்ததாக கூறியுள்ளார். அதுதான் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் நான் காதலில் இருந்த போது பின் எப்படி என்னுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருக்க அவருக்கு மனசு வந்துச்சி.

அவரைப் பிரிந்து ஐந்து வருடங்கள் மேல் ஆகிவிட்டது, இருப்பினும் அந்த பிரிவில் இருந்து என்னால் முழுமையாக வெளியே வர முடியவில்லை.  அது ஏன் என்பதற்க்கே இன்னும் தனக்கு பதில் கிடைக்க வில்லை என கூறுகிறார். 2012ம் ஆண்டு அவரை விட்டுப் பிரிந்துவிட்டேன். அவருடைய மனைவியுடன் அந்த அளவிற்கு காதலில் இருந்தவர் என்னுடன் எப்படி வாழ்ந்தார் என்பதை நினைத்தால் எனக்கு வேதனையாக உள்ளது.

மேலும் ஸ்ரீசாந்த், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரை மிகவும் நல்லவராக, ஒரு மகானாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார். அவரின் மறு பக்கம் எனக்கு தான் தெரியும். எப்போதும்மே அவர் பெண்களை மதித்ததே இல்லை என கூறியுள்ளார்.