'பாகுபலி' படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி இயக்கி வரும் 'ஆர். ஆர்.ஆர்' படத்தில்,  இருந்து திடீரென பிரபல நடிகை விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

'பாகுபலி' படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி இயக்கி வரும் 'ஆர். ஆர்.ஆர்' படத்தில், இருந்து திடீரென பிரபல நடிகை விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பாகுபலி படத்தின் மூலம் உலக சினிமாவையே, தென்னிந்திய திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான 'பாகுபலி 2 ' திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

இந்நிலையில் இவர், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரை வைத்து ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை மிக பிரமாண்டமாக இயக்கி வருகிறார்.

இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரிட்டன் நடிகை தேசிகர் ஜோன்ஸ் என்பவர் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து டெய்சி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு பதில் வேறு ஒரு நடிகை நடிப்பார் என்றும், கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆலியா பட் ,அஜய் தேவ்கன், நடிகர் சமுத்திரக்கனி , உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் பிரமாண்டமாக உருவாகும் இந்த படம் 2020 ஆம் ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது.