பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் டிரவோல்டாவின் மனைவியும் நடிகையுமான கெல்லி பிரஸ்டன் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 57.மார்பகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த கெல்லி, சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார்.

இதுபற்றி இன்ஸ்டகிராமில் ஜான் டிரவோல்டா..,"என்னுடைய அழகான மனைவி மார்பகப் புற்றுநோயுடனான இரு வருடப் போராட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். பலருடைய அன்பு மற்றும் ஆதரவினால் துணிச்சலான போராட்டத்தை அவர் மேற்கொண்டார். என் மனைவிக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் நன்றி. கெல்லியின் அன்பான வாழ்க்கை என்றும் நினைவுகூரப்படும் என்று கூறியுள்ளார். 29 வருட திருமண வாழ்க்கையில் டிரவோல்டா கெல்லிக்கு இரு குழந்தைகள் உள்ளார்கள்.கெல்லி பிரஸ்டன் ஏராளமான ஹாலிவுட் படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்."