தமிழில் நடிகர் பிரபுதேவா மற்றும் அரவிந்த் சாமி நடித்த 'மின்சாரகனவு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரபல பாலிவுட் நடிகை கஜோல். 
இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழில் கதாநாயகியாக நடிக்கா விட்டாலும், கடந்த ஆண்டு வெளியான 'வேலையில்லா பட்டதாரி2' படத்தில் வலுவான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர்  மும்பையில் ஷாப்பிங் மாலில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீர் என கால் இடறி விழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளது.

பிரபல அழகு பொருள் நிறுவனத்தின் தூதகராக இருக்கும் இவர், அந்த அழகு பொருள் சாதனத்தின் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மும்பையின் ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டிக்கு  வந்திருந்தார். இவரை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் பல பாதுகாவலர்கள் இருந்த நிலையில் பந்தாவாக நடந்து வந்த இவர் திடீர் என யாரும் எதிர்ப்பார்க்காத நேரம் கீழே விழுந்தார்.

இருப்பினும் தரையில் முழுமையாக இவர் விழும் முன்பே ஓரளவு அமர்ந்தபடி இருந்த கஜோலை அவருக்கு அருகில் இருந்த பாதுகாவலர்கள் பத்திரமாக தூக்கிவிட்டனர்.

காஜல் இப்படி கீழே விழ காரணம் இவர் பாயின்ட் ஹீல்ஸ் எனப்படும் குச்சி போன்ற பாதம் வைத்த செருப்பை அணிந்தது தான் என கூறப்படுகிறது.