பாலிவுட் திரையுலகில் பல்வேறு கஷ்டங்களை தாண்டி முன்னணி நடிகராக உயர்ந்தவர் நடிகர் ரன்வீர் சிங். தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே கொண்ட இவர், சமீபத்தில் ரசிகர் ஒருவரால் சங்கடமான சூழலுக்கு ஆளாகியுள்ளார். 

பாலிவுட் திரையுலகில் சவாலான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான பத்மாவத் படம் பல்வேறு சர்ச்சைகளை கடந்து வெளியாகி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற படமாக அமைந்தது.

நடிகை தீபிகா படுகோனை காதலித்து வருவதாக கூறப்படும் ரன்வீர் சிங்கிற்கு, ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகள் உள்ளனர், ஆனால், இவரை சங்கடத்தில் ஆழ்த்தியது என்னவோ ஆண் ரசிகர் தான் அப்படி என்ன செய்தார் தெரியுமா..? 

ஒருநாள் ரன்வீர் சிங் ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்த பிறகு பாத்ரூம் சென்றுள்ளார், அப்போது ஒருவர் இவரை வீடியோ எடுத்துக்கொண்டே வந்துள்ளார்.

அப்போது ரன்வீர் உடலில் ஒட்டு துணி இல்லாமல் நிற்க, உடனே அந்த நபரை பிடித்து மொபைலில் இருந்த வீடியோவை டெலிட் செய்துள்ளார்.

இதை தொடர்ந்து அவரை திட்டி அங்கிருந்து அனுப்பியுள்ளார், இப்படி ரசிகர்களின் தொல்லையான் நான் மிகவும் சிரமப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் சமீபத்தில் கூறியுள்ளார் ரன்வீர்.