உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விரைவில் துவங்க உள்ள நிலையில் அடிக்கடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளவர்கள் பற்றிய தகவல் வெளியான வண்ணம் உள்ளது. இந்த பட்டியலில் வாரிசு நடிகரின் மகன் பெயர் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இது குறித்து அவரே விளக்கம் கொடுத்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிகழ்ச்சியில் பிரபல குணசித்திர நடிகர் மட்டும் டப்பிங் ஆர்டிஸ்டுமான எம்எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் மற்றும் பிரபல நடிகர் நாசரின் மகனும் விக்ரம் நடிப்பில் உருவான ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்த அபுஹாஸன் ஆகிய இருவரும் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது நாசரின் மகன் அபுஹாசன், தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதில் இருந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக வெளியான தகவல் வெறும் வந்தந்தி தான் என்பது உறுதியாகியுள்ளது.

 ஆனால் அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் ஆதித்யா தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வராததால் ஒருவேளை அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றேஎதிர்பார்க்கப்படுகிது.