பிரபல நடிகர் திலீப் குமார் கடந்த 30 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்றாலும், இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் தான் உள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். 

பிரபல நடிகர் திலீப் குமார் கடந்த 30 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்றாலும், இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் தான் உள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் திலீப் குமார் ஜூன் 30 ஆம் தேதி திடீர் என ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகிறார்கள். இந்த தகவலை அவரது மனைவியம், மூத்த நடிகையுமான சாய்ரா பானு, தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக சுவாச பிரச்சனை இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

98 வயதாகும் பழம்பெரும் நடிகர் திலீப் குமார், கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொண்டு பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் மற்றும் ஜூன் மாதம் 6 ஆம் தேதி என அடுத்தடுத்து அனுமதிக்க பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது மருத்துவர்களின் சிகிச்சைக்கு பிறகு, திலீப் குமார் உடல்நிலை சீராக உள்ளதாக உள்ளதாகவும், ஆனால் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் தான் அவர் உள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். மேலும் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லவே விரும்புவதாகவும், அவர் உடல்நலம் பெற ரசிகர்கள் பிராத்தனை செய்ய வேண்டும் என உருக்கமாக கூறியுள்ளார்.

பழம்பெரும் நைடகர்களில் ஒருவரான திலீப் குமார், 1944 ஆம் ஆண்டு ஸ்வார் படா என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தவர். தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.தாதாசாகேப் பால்கே விருதை பெற்றுள்ள இவர், மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை அதிகமுறை வென்ற நடிகர் என்கிற பெருமை இவருக்கு உண்டு.