famous actor death in heartattack
இந்தியில் பல தொலைக்காட்சி தொடர்களிலும் , நடிகர் ஷாருக்கான் நடித்த ரயீஸ், ரித்த்க் ரோஷன் நடித்த காபில் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நரேந்திர ஜா.
55 வயதாகும் இவர் மாரடைப்பு காரணமாக இன்று மரணடைந்தார். மேலும் இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
இந்நிலையில் இவர் மும்பை வாதா பகுதியில் இருக்கும் பண்ணை வீட்டில் தனது மனைவியுடன் ஓய்வு எடுத்து வந்த நிலையில் இன்று காலை திடீர் என மாரடைப்பு ஏற்ப்பட்டு மரணமடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது பிரபலங்கள் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
