பிரபல குணச்சித்திர நடிகர் பாலா சிங், மலையாள திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ் திரையுலகில் தான் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 

இவர் தமிழில், நடிகர் நாசர் எழுதி, இயக்கி, நடித்த 'அவதாரம்' படத்தில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து,  இந்தியன், ராசி, உல்லாசம், சிம்மராசி, போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்து பிரபலமானார்.

சமீபத்தில் இவர் நடித்திருந்த என்.ஜி.கே படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் 'சர்வம் தாளமயம்',  'சாமி ஸ்கொயர்', 'தானா சேர்ந்த கூட்டம்', 'மகாமுனி' என எப்போது பிசியாக நடித்து கொண்டிருந்தார்.

அதேபோல் சின்னத்திரையிலும், சூலம், ருத்ரவீணை, நல்ல நேரம், ஆதிரா, போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். இதுவரை 100 கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவருக்கு தற்போது 67 வயது ஆகிறது.   

இந்நிலையில் இவருக்கு சில தினங்களுக்கு முன், கடுமையான காச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படவே, இவரை குடும்பத்தினர்  வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்து வந்துள்ளனர்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் இவரின் உடல் நிலை தற்போது  கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இவர் உடல்நிலை விரைவில் நலம் பெற்று மீண்டும் திரும்பி வர வேண்டும் என்பதே ரசிகர்கள் மற்றும் அவரது நலம் விரும்பிகளின் ஆவலாக உள்ளது.