பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ராதிகா ரெட்டி என்பவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம், தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராதிகா ரெட்டி:

தெலுங்கு தொலைக்காட்சியில், பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் 36 வயதாகும் ராதிகா ரெட்டி. இவர் ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும் இவருக்கும் இவருடைய கணவருக்கும் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 6 மாதத்திற்கு முன் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

கணவரை விவாகரத்து செய்த பின்னர் இவர் தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கே சென்றுவிட்டார். இவருக்கு 14 வயதில் சற்று மனநலம் பாதித்த மகன் உள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்ட ராதிகா ரெட்டி... விரத்தியின் காரணமாக 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இவருடைய உடலை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை குறித்து இவர் எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் 'மன அழுத்தம் காரணமாக நானே என்னை கொலை செய்துக்கொள்கிறேன் என்றும் என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என்னுடைய மூளையே எனக்கு எதிரி" என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது. மிகவும் பிரபலமான தொகுப்பாளினியான இவரின் மரணம் தெலுங்கு நடிகர் - நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.