'மீடூ' இயக்கம்  நாடு முழுவதும் பரவி நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த பிரச்சனையில் சில இந்தி நடிகர்கள் 'மீடூ' வுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.நடிகைகளுக்கு ஏற்பட்ட சங்கடங்களையும் வெளிப்படுத்திகிறார்கள்.

அந்த வகையில் தற்போது பிரபல இந்தி நடிகர் தலித் தாஹில் புதுமுக நடிகைகளுக்கு நேர்ந்த தொல்லைகளை வெளிப்படுத்தி உள்ளனர். அவர் கூறியதாவது.

 

"நான் 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தி படமொன்றில் நடித்தேன். அதில் பலாத்கார காட்சியொன்றை படமாக்கினார்கள். படத்தின் இயக்குனர் என்னிடம் வந்து அந்த காட்சியில் நடிகையின் ஆடையை கிழித்து விடுங்கள் என்றார். ஆடையை கிழிக்கும் விஷயத்தை அந்த நடிகையிலிடம் சொல்ல வேண்டாம் என்றும் கூறினார்.

அதற்க்கு நான் மறுத்து விட்டேன். நடிகையிடம் சொல்லாமல் செய்வது நாகரிகமற்ற செயல் இருந்த மறுத்தேன். அந்த நடிகை சினிமாவிற்கு புதியவர். நடிகையை அழைத்து இயக்குனர் சொன்ன விஷயத்தை தெரிவித்தேன். அதை கேட்டதும் அந்த நடிகை அழுதுகொண்டே ஒரு அறைக்குள் ஓடி விட்டார்.

அந்த காலத்தில் செல்போன் இல்லை. கேமரா மட்டுமே இருந்தது. நடிகையை அழைத்து இயக்குனர் சொன்னது போல் எதுவும் செய்து விட மாட்டேன் என உறுதியளித்த பின் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்தார் என அந்த காலத்திலேயே இது போன்ற சம்பவங்கள் அரங்கேறியதாக தெரிவித்துள்ளார் நடிகர் தலித் தாஹில்.