familiar actrees sumbal khan shot dead in pakistan

பிரபல நடிகை சுட்டு கொலை..! பார்ட்டிக்கு வர மறுத்ததால் கொடூரம்..திரைத்துறை அதிர்ச்சி..!

பிரபல நடிகையான சும்பல் கான் பாகிஸ்தானை சேர்ந்தவர்.இவர் ஒரு பாடகி மட்டுமில்லாமல், பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி நடத்தி வந்துள்ளார்.சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில்,சும்பால் கானை, ஒரு பணக்கார வர்கத்தினர் பார்ட்டிக்கு வந்து அவர்களுடன் நடனம் ஆட வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தெரிகிறது

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சும்பல் கானை,பாதுகாப்பையும் மீறி அவரது வீட்டிற்கே சென்று சுட்டுகொன்றது மட்டுமில்லாமல், தீ வைத்து எரித்து உள்ளனர் இந்த கொடூரன்கள்

ஷேக் மால் டவுனில் சும்பல் கானின் வீடு உள்ளது.இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முதற்கட்டமாக முன்னாள் போலிஸ் அதிகாரி ஒருவர் இதில் தொடர்புடையது தெரியவந்துள்ளது.

நேற்று நடைபெற்ற இந்த கோர சம்பவத்தை அடுத்து,அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் திரைதுறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அதிலும் குறிப்பாக நடிகைகள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.